நிறுவன விவரம்
தமிழ்நாடு மின்சார வாரியமானது 01/07/1957 அன்று தொடங்கப்பட்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயல்களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் 53 ஆண்டுகளின் பயணத்திற்கு பின்னர் 01/11/2010 அன்று தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அரசு ஆணை எண் 114 நாள் 08/10/2008 ல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியமானது த.நா.மி.வா. நிறுவனம் தலைமையில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.